சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட விசாரணைகள் முக்கியம்; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி


சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட விசாரணைகள் முக்கியம்;  மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
x

நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்பு முக்கியம் என்று போலீஸ்துறைமந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;

மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி

மாநில போலீஸ்துறை மந்திரி அரக ஞானேந்திரா, பெங்களூருவில் இருந்து சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவிற்கு காரில் நேற்றுமுன்தினம் மாலை சென்றார். இதற்கிடையே செல்லும் வழியில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் பா.ஜனதா தொண்டர்களை சந்தித்தார். அப்போது அவரை, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இதைதொடர்ந்து அவர், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருவதற்கு என்ன காரணம் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம்.இதில் வேண்டும் என்றே யாரையும், ஒருதலைபட்சமாக விசாரணை நடத்தப்படவில்லை.


தண்டிக்கப்படுவார்கள்

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு விதமாக பேசி வருகின்றனர். நாட்டில் மகாத்மா காந்தி இருக்கும்போது ஒரு சட்டம் இருந்தது, தற்போது மற்றொரு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பா.ஜனதா செயல்படுவதாக காங்கிரசார் கூறி வருகின்றனர்.

தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள். நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டுமானல் அமலாக்கப்பிாிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story