'லவ் ஜிகாத்' பற்றியே அனைவரும் விவாதிக்க வேண்டும்; கர்நாடக பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு


லவ் ஜிகாத் பற்றியே அனைவரும் விவாதிக்க வேண்டும்; கர்நாடக பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

‘லவ் ஜிகாத்’ பற்றியே அனைவரும் விவாதிக்க வேண்டும் என்று நளின்குமார் கட்டீல் எம்.பி. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மங்களூரு:

பா.ஜனதா கொடி

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் எம்.பி. தலைமையில் மங்களூருவில் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் நளின்குமார் கட்டீல் எம்.பி. பேசியதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 8 இடங்களில் வெற்றி பெற்றது. வரும் தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும்.

அதற்கான பா.ஜனதா தொண்டர்கள் உழைக்க வேண்டும். வீடுகள் தோறும் பா.ஜனதா கொடியை பறக்க விட வேண்டும். பூத் மட்டத்தில் இருந்து அனைவரும் பணியாற்ற வேண்டும். இதற்காக 'பூத் விஜய் அபியான்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

லவ் ஜிகாத்

பா.ஜனதாவின் கொடி பறக்க ேவண்டிய நேரம் இது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு உள்ளது. அதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சித்தராமையாவின் ஏஜெண்டாக கெம்பண்ணா செயல்படுகிறாா். 40 சதவீத கமிஷன் குறித்து ஆதாரம் இருந்தால் லோக் அயுக்தாவிடம் கொடுக்க வேண்டும். இந்துக்களை வெறுக்கும் காங்கிரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இனிமேல் மாநிலத்தில் சாலை, வடிகால், கால்வாய் சரியில்லை என யாரும் பேசக்கூடாது. 'லவ் ஜிகாத்' பற்றி மட்டுமே அனைவரும் விவாதிக்க வேண்டும். மதமாற்ற தடை சட்டம், பசுவதை தடுப்பு சட்டம் போல, 'லவ் ஜிகாத்' தடுப்பு சட்டமும் கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். நளின்குமார் கட்டீலின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story