இயற்கை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 2030-க்குள் ரூ.8276.55 கோடியாக உயர்த்த இலக்கு: மத்திய மந்திரி பேச்சு


இயற்கை உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 2030-க்குள் ரூ.8276.55 கோடியாக உயர்த்த இலக்கு:  மத்திய மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 AM GMT (Updated: 19 Feb 2023 6:50 AM GMT)

இயற்கை சார்ந்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 100 கோடி அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசியுள்ளார்.


கேங்டாக்,



சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் நகரில் நடந்த சிக்கிம் வர்த்தக மற்றும் தொழில் துறை சேம்பரின் உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் குடிமைபொருள் வினியோகம் மற்றும் ஜவுளி துறைக்கான மத்திய மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசும்போது, நாட்டில் இயற்கை சார்ந்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை, ரூ.8.28 கோடி என்ற அளவில் இருந்து ரூ.8276.55 கோடியாக வரும் 2030-ம் ஆண்டுக்குள் உயர்த்த வேண்டும். அது சாதிக்கப்பட கூடியதே என்பதில் 100 சதவீத நம்பிக்கை எனக்கு உள்ளது என பேசியுள்ளார்.

இதற்காக, மத்திய அரசின் சார்பில் அதிக தரம் வாய்ந்த, நவீன வசதிகளுடன் கூடிய, இயற்கை சார்ந்த பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை பரிசோதனை ஆய்வகம் ஒன்றை அமைக்க இருக்கிறோம் என கூறியுள்ளார்.

இதற்கு ஏற்ற வகையில், ஒரு நீடித்த இயற்கை சார்ந்த மாநிலம் ஆக உருவாவதற்கான ஆற்றல் சிக்கிம் மாநிலத்திற்கு உள்ளது என அவர் கூறியதுடன், இந்த மைல்கல்லை அடைவது, மாநிலம் வளர்ச்சி அடைய உதவுவதுடன், சுற்றுலா துறையும் வளரும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.


Next Story