கவர்னர் பெயரில் போலி உறுப்பினர் சான்றிதழ் வழங்கி மோசடி


கவர்னர் பெயரில் போலி உறுப்பினர் சான்றிதழ் வழங்கி மோசடி
x

கவர்னர் பெயரில் போலி உறுப்பினர் சான்றிதழ் வழங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:


பெங்களூருவில் உள்ள ராஜீவ்காந்தி பல்கலைக்கழகத்தில் கீதா சசிகுமார் என்பவர் சின்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பதாக, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெயரில் ஒரு நியமன சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. அந்த சான்றிதழ் மீது சந்தேகம் அடைந்த பல்கலைக்கழக அதிகாாிகள், கவர்னர் மாளிகைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது கவர்னா் மாளிகை சார்பில் இருந்து சின்டிகேட் உறுப்பினராக யாரையும் நியமிக்கவில்லை என்பதும், அது போலி நியமன சான்றிதழ் என்பதும் தெரியவந்தது.


அதாவது கவர்னர் மாளிகையில் உயர் அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி, அந்த போலி நியமன சான்றிதழை சத்ருல்லா கான் என்பவர் தான் கீதாவிடம் வழங்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடா்பாக விதானசவுதா போலீஸ் நிலையத்தில், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டின் சிறப்பு செயலாளர் பிரபு சங்கர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து அந்த மர்மநபரை தேடிவருகிறார்கள்.


Next Story