கள்ளக்காதலுக்கு இடையூறு; குழந்தைகள் கண்முன்பே கழுத்தை நெரித்து விவசாயி கொலை- மனைவி, கள்ளக்காதலன் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறு; குழந்தைகள் கண்முன்பே கழுத்தை நெரித்து விவசாயி கொலை- மனைவி, கள்ளக்காதலன் கைது
x

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தைகள் கண்முன்பே கழுத்தை நெரித்து விவசாயி கொலை செய்யபபட்டார். இதுதொடர்பாக மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தாலுகா குட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமண்ணா. இவர் விவசாயி ஆவார். ராமண்ணாவின் மனைவி சுனிதா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுனிதாவுக்கும், குட்டஹள்ளியை சேர்ந்த மல்லப்பா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்து உள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர். கள்ளக்காதல் பற்றி அறிந்த ராமண்ணா, சுனிதா கண்டித்து வந்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு ராமண்ணாவின் வீட்டிற்குள் புகுந்த மல்லப்பா, சுனிதாவுடன் சேர்ந்து ராமண்ணாவின் கழுத்தை நெரித்தார்.

அப்போது மல்லப்பாவை பிடித்து ராமண்ணா தள்ளிவிட்டு கூச்சல் போட்டார். கூச்சல் சத்தம் போட்டு ராமண்ணாவின் குழந்தைகள் எழுந்து வந்து ராமண்ணாவையும், சுனிதாவையும் தடுக்க முயன்றனர். ஆனாலும் குழந்தைகள் கண்முன்பே ராமண்ணாவின் கழுத்தை நெரித்து மல்லப்பாவும், சுனிதாவும் கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சுலேபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லப்பா, சுனிதாவை கைது செய்தனர்.


Next Story