காஷ்மீரில் உள்ள தனது வீட்டில் தேசியக்கொடியை ஏற்றிய பரூக் அப்துல்லா
காஷ்மீரில் உள்ள தனது வீட்டில் பரூக் அப்துல்லா தேசியக்கொடியை ஏற்றினார்.
ஸ்ரீநகர்,
தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மக்களவை எம்.பி.யுமான பரூக் அப்துல்லா, சுதந்திர தினத்தையொட்டி ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டில் நேற்று தேசியக்கொடியை ஏற்றினார்.
அப்போது பேசிய பரூக் அப்துல்லா, 'சுதந்திரம் பெற்றதில் இருந்து நம் நாடு வெகு தூரம் வந்துவிட்டது. அமெரிக்காவிடம் இருந்து தரம் குறைந்த உணவுப்பொருட்களை இறக்குமதி செய்த நிலையில் இருந்து, நமது தேவைக்குப் போக வெளிநாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம். ஆனால் இன்றும் நாம் எதிர்கொள்ள வேண்டிய பல சவால்கள் உள்ளன' என்று கூறினார்.
Related Tags :
Next Story