காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு வீட்டுச்சிறையா? போலீசார் மறுப்பு


காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு வீட்டுச்சிறையா?  போலீசார் மறுப்பு
x

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 3-வது ஆண்டு நேற்று தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 3-வது ஆண்டு நேற்று தினம் கடைப்பிடிக்கப்பட்டது.இதையொட்டி மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி பல்வேறு கண்டன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நவாய்-சுபா பகுதியில் நடந்த கண்டன கூட்டம் ஒன்றில் பங்கேற்று விட்டு வந்த பரூக் அப்துல்லா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு இருப்பதாக தேசிய மாநாடு கட்சி தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்தது.

எனினும் சட்ட விரோதமாகவும், ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிராகவும் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க அமைதியான முறையில் போராடுவோம் என்றும் அந்த கட்சி குறிப்பிட்டு இருந்தது. முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தேசிய மாநாடு தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.


Next Story