சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் மரணம்; தவறான திட்ட அறிக்கைகளே காரணம்: மந்திரி நிதின் கட்கரி குற்றச்சாட்டு!
சாலை விபத்துகள் ஏற்படு திட்ட அறிக்கைகளில் ஆலோசகர்கள் செய்த தவறுகள் தான் காரணம் என்று அவர் தெரிவித்தார்.
மும்பை,
சாலை விபத்துகளால் பலர் உயிரிழக்க ஆலோசகர்கள் தயாரித்து வழங்கும் விரிவான திட்ட அறிக்கைகளில் உள்ள தவறுகளே காரணம் என்று மந்திரி நிதின் கட்கரி பேசினார்.
மும்பையில் நடைபெற்ற தேசிய சிவில் இன்ஜினியர்களின் மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "நாட்டில் ஒவ்வொரு ஆண்டும், ஐந்து லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன, இதில் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.
இதற்கு விரிவான திட்ட அறிக்கைகளில் ஆலோசகர்கள் செய்த தவறுகள் தான் காரணம். பெரும்பாலான திட்ட அறிக்கைகள் மிகவும் பழமைவாதமானவை.
ஏன் விரிவான திட்ட அறிக்கைகள்(டிபிஆர்) தவறானவையாக உள்ளன மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் எனக்குத் தெரியவில்லை.
ஆகவே விரிவான திட்ட அறிக்கை(டிபிஆர்) தயாரிப்பதில் தரமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தவறுகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை தயார் செய்ய வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.