தூக்குப்போட்டு பெண் தற்கொலை

பெங்களூருவில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு, டிச.23-
பெங்களூரு பாகலகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டிபன்ஸ் காலனியில் வசித்து வந்தவர் லட்சுமி தேவி(வயது 42). இவரது சொந்த ஊர் ஹாசன் மாவட்டம் ஆகும். நேற்று லட்சுமி தேவியின் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த லட்சுமி தேவி திடீரென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாழ்க்கையில் விரக்தி அடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாகலகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





