போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 2 கோடிக்கு போலீசிடமே நிலத்தை விற்ற பாஜக நிர்வாகி...!


போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 2 கோடிக்கு போலீசிடமே நிலத்தை விற்ற பாஜக நிர்வாகி...!
x

அந்த நிலத்தின் மீது வங்கியில் ஏற்கனவே 78 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் சவுகன்பூர் கிராமத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ஓம்பிரகாஷ் என்ற பிரகாஷ் மிஸ்ரா.

இவருக்கு சவுகன்பூரில் 0.253 சதுர மீட்டர் பரப்பில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் வங்கியில் அடமானம் வைத்து 78 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இதனிடையே, அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தை விரிவுபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விரிவாக்க பணிக்காக நிலம் தேவைப்பட்டதையடுத்து தனது நிலத்திற்கு போலி பத்திரங்களை தயாரித்த ஓம்பிரகாஷ் தனது நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு போலீசிடமே விற்பனை செய்துள்ளார்.

ஏற்கனவே நிலத்தை 78 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளபோதும் போலியாக ஆவணங்களை தயாரித்து அமேதி போலீசிடம் நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக அமேதி போலீசிடம் 1.97 கோடி ரூபாய் பணத்தை ஓம் பிரகாஷ் பெற்றுள்ளார்.

மோசடி செய்து தெரியவந்ததையடுத்து பாஜக நிர்வாகி ஓம்பிரகாஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story