அசாமில் வெள்ளம்: 108 கிராமங்கள் நீரில் மூழ்கின; லட்சக்கணக்கான மக்கள் பரிதவிப்பு

அசாமில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளால் அதிகளவாக நல்பாரி மாவட்டத்தில் 108 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பரவலாக லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
அசாமில் வெள்ளம்: 108 கிராமங்கள் நீரில் மூழ்கின; லட்சக்கணக்கான மக்கள் பரிதவிப்பு
Published on

நல்பாரி,

அசாமில் மற்றும் அதனையொட்டி உள்ள பூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பக்லாடியா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளநீரானது புதிய பகுதிகளிலும் புகுந்து உள்ளது.

அசாமில் நல்பாரி மாவட்டம் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், 310 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கி உள்ளன. வெள்ளத்திற்கு 2 அணைக்கரைகள், 15 சாலைகள், 2 பாலங்கள், கால்வாய்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உள்ளன.

வெள்ளத்திற்கு நல்பாரி மாவட்டத்தில் மட்டும் 44,707 பேர் பாதிப்படைந்து உள்ளனர். 108 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதுதவிர, பக்சா (26,571), லகீம்பூர் (25,096), தமுல்பூர் (15,610) மற்றும் பார்பேட்டா (3,840) ஆகிய மாவட்டங்களிலும் மக்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 1.07 லட்சம் கால்நடை வளர்ப்பு பிராணிகள் மற்றும் கோழி பண்ணைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com