கர்நாடகத்தில் 23 வாரியங்களுக்கு புதிய தலைவர்கள்-சிறுபான்மையினர் வாரிய தலைவராக தமிழரான எம்.சரவணா நியமனம்


கர்நாடகத்தில் 23 வாரியங்களுக்கு   புதிய தலைவர்கள்-சிறுபான்மையினர் வாரிய தலைவராக தமிழரான எம்.சரவணா நியமனம்
x

கர்நாடகத்தில் 23 வாரியங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர் வாரிய தலைவராக தமிழரான எம்.சரவணா நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் 23 வாரியங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர் வாரிய தலைவராக தமிழரான எம்.சரவணா நியமிக்கப்பட்டுள்ளார்.

வாரிய தலைவர்கள் நியமனம்

கர்நாடகத்தில் 47 வாரியங்களுக்கு தலைவர்களாக இருந்தவர்களை சமீபத்தில் கர்நாடக அரசு அந்த பதவியில் இருந்து நீக்கி இருந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் 23 வாரியங்களுக்கு புதிய தலைவர்களை நேற்று நியமித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி கர்நாடக சிறுபான்மையினர் மேம்பாடு வாரிய தலைவராக எம்.சரவணா நியமிக்கப்பட்டு உள்ளார். அல்சூர் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரான எம்.சரவணா, தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

சிவக்குமார்

1. கர்நாடக உள்கட்டமைப்பு வாரியம் - விருபாக்‌ஷப்பா.

2. கர்நாடக சந்தைப்படுத்துதல் தகவல் தொடர்பு விளம்பர வாரியம் - கரிகவுடா.

3. கர்நாடக மீன்வள ேமம்பாட்டு வாரியம் - தீர்த்தராமு.

4. கர்நாடக ஆடு வளர்ப்பு மேம்பாட்டு வாரியம் - தர்மண்ணா தொட்டமணி.

5. கர்நாடக உயிரி வாரியம் - ரவிகாலப்பா.

6. கர்நாடக மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு ெசயல்படை வாரியம் - கோவிந்த ஜத்தியப்பா.

7. மைசூரு உயிரியல் பூங்கா ஆணையம் - சிவக்குமார்.

8. கர்நாடக வன உயிரியல் மேம்பாட்டு வாரியம் - ரேவண்ணப்பா.

9. கர்நாடக பட்டு வாரியம் - கவுதம் கவுடா.

10. கர்நாடக லிம்பே மேம்பாட்டு வாரியம் - சந்திரசேகர கவட்டகி.

எம்.சரவணா

11. கர்நாடக திராட்சை மேம்பாட்டு வாரியம் - ரவி நாராயணரெட்டி.

12. கர்நாடக பொருட்காட்சி ஆணையம் - சீனிவாஸ்

13. கர்நாடக காடுகொல்லா மேம்பாட்டு வாரியம் - சங்காவர மாரண்ணா.

14. கர்நாடக பழங்குடியின மக்கள் மேம்பாட்டு வாரியம் - தேவேந்திர நாத்.

15. மைசூரு வென்ட்ஸ்-வார்னிஷ் வாரியம் - ரகு கவுடலகி.

16. கர்நாடக துப்புரவு தொழிலாளர்கள் வாரியம் - வெங்கடேஷ்.

17. கர்நாடக மதுபான மேம்பாட்டு வாரியம் - மல்லிகார்ஜூனா.

18. துங்கபத்ரா வாரியம்- குல்லா சேஷாகிரி ராவ்.

19. காவிரி படுகை வாரியம் - நிஜகுணராஜ்.

20. கைவினை பொருட்கள் வாரியம் - மாருதி மல்லப்பா.

21. கர்நாடக சிறுபான்மையினர் மேம்பாட்டு வாரியம் - எம்.சரவணா.

இவர்கள் உள்பட 23 பேர் வாரிய தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story