சித்தராமையா பற்றிய கருத்துக்கு மந்திரி அஸ்வத் நாராயண் வருத்தம்


சித்தராமையா பற்றிய கருத்துக்கு  மந்திரி அஸ்வத் நாராயண் வருத்தம்
x
தினத்தந்தி 17 Feb 2023 6:45 AM GMT (Updated: 17 Feb 2023 6:46 AM GMT)

சித்தராமையா குறித்த கருத்துக்காக உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் வருத்தம் தொரிவித்துள்ளார்.

பெங்களூரு,

உள்நோக்கம் இல்லை

கர்நாடக சட்ட சபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மண்டியாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தால், திப்பு சுல்தானை ஆராதிக்கும் சித்தராமையா ஆட்சிக்கு வருவார். உங்களுக்கு திப்பு சுல்தான் வேண்டுமா? அல்லது வீரசாவர்க்கர் வேண்டுமா?. இந்த திப்பு சுல்தானை (சித்தராமையா) எங்கு அனுப்ப வேண்டும்?. அவர் ஆட்சிக்கு வந்துவிட்டால் உரி கவுடா, நஞ்சேகவுடா என்ன செய்ய வேண்டும்?. அதனால் திப்பு சுல்தானை போல் சித்தராமையாவையும் முடிக்க (ெகாலை செய்ய) வேண்டும்.இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

கண்டனம்

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் தனது கருத்துக்காக அஸ்வத் நாராயண் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-மண்டியாவில் திப்பு சுல்தான்-சித்தராமையா ஆகியோரை ஒப்பிட்டு நான் பேசிய கருத்துகள் திடீரென வந்தவை. அதில் எந்த விதமான உள்நோக்கமும் இல்லை. அரசியலில் எதிர்க்கட்சி தலைவர்களை தாக்கி பேசுவது வழக்கமானது. சித்தராமையா குறித்து நான் கூறிய கருத்துக்களை அதனுடன் தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டும். இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியமானது. வருத்தம் தெரிவித்தார்பேச்சு வழக்கில் சித்தராமையாவை தோற்கடிக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் எனது கருத்தை தங்களுக்கு ஏற்றபடி புரிந்து கொண்டு சித்தராமையா பேசுகிறார். சித்தராமையாவின் பேச்சு மொழி என்ன என்பது கர்நாடக மக்களுக்கு நன்கு தெரியும். திப்புவின் மனநிலை மண்டியா மக்களுக்கு இல்லை. பிரதமர் மோடியை கொலையாளி என்று சொல்வது, முதல்-மந்திரியின் வீடு பாழாகட்டும் என்று பேசுவது சித்தராமையாவின் கலாசாரமாக இருக்கலாம். இந்த முறை நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் சித்தராமையா குறித்து பேசினேன். ஒருவேளை நான் கூறிய கருத்துக்கள் அவரை புண்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.


Next Story