பா.ஜனதாவினருக்கு, வீரசாவர்க்கர்-கோட்சே தான் தலைவர்கள்; யதீந்திரா சித்தராமையா எம்.எல்.ஏ. பேச்சு


பா.ஜனதாவினருக்கு, வீரசாவர்க்கர்-கோட்சே தான் தலைவர்கள்; யதீந்திரா சித்தராமையா எம்.எல்.ஏ. பேச்சு
x

பா.ஜனதாவினருக்கு, வீரசாவர்க்கர்-கோட்சே தான் தலைவர்கள் என யதீந்திரா சித்தராமையா எம்.எல்.ஏ. பேசியுள்ளார்.

மைசூரு;


எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் மகனும், மைசூரு தாலுகா வருணா தொகுதி எம்.எல்.ஏ.வுமான யதீந்திரா சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வீரசாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர் அல்ல. அந்தமான் சிறையில் இருந்துகொண்டு மன்னிப்பு கேட்டு விடுதலை செய்யகோரி ஆங்கிலேயர்களுக்கு 6 முறை கடிதம் எழுதியவர். நாட்டில் அநியாயம், அக்கிரமம் செய்பவர்களை எல்லாம் தலைவர்களாக ஏற்று கொள்கிறார்கள்.

உன்மையான சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை மறைக்கின்றனர். வீரசாவர்க்கர், இந்து-முஸ்லிம் மக்கள் நடுவில் கலவரத்தை உண்டாக்கினார். இதுபோன்று பல்வேறு நாசவேலைகளை சாவர்க்கர், கோல்வாலேக்கர் ஆகியோர் செய்திருக்கிறார்கள். பா.ஜனதாவினருக்கு, வீரசாவர்க்கர், கோட்சே தான் தலைவர்களாக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story