உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி வளர்ச்சிக்குரூ.1,138 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்


உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி வளர்ச்சிக்குரூ.1,138 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
x
தினத்தந்தி 27 March 2023 5:15 AM GMT (Updated: 27 March 2023 5:22 AM GMT)

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் மற்றும் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.1,138 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

உப்பள்ளி-

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் மற்றும் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.1,138 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மாநகராட்சி பட்ஜெட்

பெங்களூரு மாநகராட்சிக்கு அடுத்தபடியாக மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய மாநகராட்சி என்றால் அது உப்பள்ளி-தார்வார்தான். இந்த மாநகராட்சியின் 2023-24 ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மேயர் ஈரேஷ் அஞ்சட்டகேரி தாக்கல் செய்தார்.

இதில் மாநகராட்சியில் சாலைகள், வடிகால், தெருவிளக்குகள், புதிய பஸ் நிலையம், உள்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடியில் இருந்து ரூ.1,138.46 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.1,138 கோடி ஒதுக்கீடு

இந்த பட்ஜெட் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மேயர் ஈரேஷ் அஞ்சட்டகேரி கூறியதாவது:-

உப்பள்ளி மாநகராட்சியில் இதுவரை தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த முறை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.831 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முறை ரூ.1,138.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு வருமானம் ரூ.464.65 கோடி கிடைத்தது. இதனால் குறைந்த பட்ஜெட் தாக்கல் செய்தோம்.

இந்த ஆண்டுகள் விலை வாசி உயர்வு மற்றும் பல்வேறு காரணங்களால் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பட்ஜெட் மூலம் பல்வேறு வரிகள், அபராதம், குடிநீர் கட்டணம், வணிக கடை வாடகை, என ரூ.663 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக புதிய வரிகள் எதுவும் விதிக்கவில்லை.

வரியில் மாற்றம் இல்லை

குறிப்பாக கடை, வீடு, வாடகை, வணிகம் சார்ந்த துறைகளுக்கு வரியில் எந்த மாற்றமும் இல்லை. பட்ஜெட்டில் கூடுதலாக 134 தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 206 பேரை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதேபோல மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பல்வேறு அரசு அலுவலகம் மற்றும் பூங்காக்கள் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story