காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் வெளிநாட்டு பயங்கரவாதி பலி


காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் வெளிநாட்டு பயங்கரவாதி பலி
x

காஷ்மீரில் சோபியான் மாவட்டம் கப்ரன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் சோபியான் மாவட்டம் கப்ரன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, ஓரிடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். அவன் பெயர் கம்ரன் பாய் என்றும், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த வெளிநாட்டு பயங்கரவாதி என்றும் கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் உறுதிப்படுத்தினார். கம்ரன் பாய், குல்கம் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்தான்.

1 More update

Next Story