வெளியுறவு கொள்கைகள் சாமானிய மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது- மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு


வெளியுறவு கொள்கைகள் சாமானிய மக்களின் மீது   தாக்கத்தை ஏற்படுத்துகிறது- மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு
x

வெளியுறவு கொள்கைகள் சாமானிய மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பெங்களூரு: வெளியுறவு கொள்கைகள் சாமானிய மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பாதிப்பு உண்டாகவில்லை

பெங்களூருவில் பி.இ.எஸ். பல்கலைக்கழகத்தில் நேற்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஷியா-உக்ரைன் போர் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவ-மாணவிகள் கேள்வி கேட்டனர். அதற்கு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

ரஷியா-உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா தனது அனுபவம் மற்றும் நாட்டின் நலனுக்கு ஏற்ற வகையில் செயல் திட்ட தந்திரங்களை வகுத்து திடமான முடிவு எடுத்தது. இந்த முடிவால் நமது நலனுக்கு எந்த வகையிலும் பாதிப்பு உண்டாகவில்லை. நான் எந்த ஒரு பணியையும் சவாலாக கருதுவது இல்லை. எல்லாவற்றையும் நமது பணியின் ஒரு பகுதியாகவே நினைக்க வேண்டும்.

குறிப்பிடத்தக்க மாற்றம்

மின்சாதனம் மற்றும் மின்சார தேவையில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நாம் பிற நாடுகளை சார்ந்து இருக்கிறோம். இதில் இருந்து விடுபட நாம் நல்ல திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். 'செமிகண்டக்டர்' சிப்புகளை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். நாட்டின் எல்லா துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

கிராமப்புற இளைஞர்களும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் இன்று இந்தியாவை திரும்பி பார்க்கிறது. இதற்கு நாம் இதுவரை சாதித்த விஷயமே காரணம். சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. திறன்மிக்க இளைஞர் சக்தியை முழுமையாக பயன்படுத்தும் நிலை ஏற்பட வேண்டும். வெளியுறவு கொள்கைகளும் சாமானிய மக்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆக்சிஜன்

பெட்ரோலிய பொருட்களின் விலை வித்தியாசங்களே இதற்கு நல்ல உதாரணம். கொரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் வாயு பற்றாக்குறை ஏற்பட்டது. உடனடியாக கத்தார், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டது. அதற்கு அந்த நாடுகளுடன் இந்தியா நல்லுறவை பேணுவதே முக்கிய காரணம்.

இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


Next Story