கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. மகன் கைது


கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. மகன் கைது
x

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நிஷத் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜய் மிஸ்ரா. 4 முறை எம்.எல்.ஏ. ஆன விஜய் மிஸ்ரா கொலை மிரட்டல், மோசடி வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதான விஜய் மிஸ்ராவின் மனைவி ராம்லாலி மிஸ்ரா தற்போது ஜாமினில் உள்ளார்.

இதற்கிடையே, விஜய் மிஸ்ராவின் மகன் விஷ்ணு மிஸ்ரா. பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த விஷ்ணு மிஸ்ரா மீது 2020-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஷ்ணு தலைமறைவானார்.

விஷ்ணு மிஸ்ராவை கைது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் விஷ்ணு குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டது. பின்னர், அந்த சன்மான தொகை ரூ. 1 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் புனேவில் தலைமறைவாக இருந்த விஷ்ணு மிஸ்ராவை உத்தரபிரதேச போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஷ்ணு இன்று உத்தரபிரதேசம் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story