அயோத்தியில் மசூதி கட்ட அடுத்த ஆண்டு அடிக்கல்: மசூதி மேம்பாட்டு கமிட்டி தகவல்


அயோத்தியில் மசூதி கட்ட அடுத்த ஆண்டு அடிக்கல்: மசூதி மேம்பாட்டு கமிட்டி தகவல்
x

விழாவில் அனைத்து நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மத தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

மும்பை,

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து நிலவி வந்த நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்தநிலையில் உத்தரபிரதேச மாநில அரசு நிலம் வழங்கிய இடத்தில் மசூதி கட்டும் பணியை தொடங்க இருப்பதாக அயோத்தி மசூதி மேம்பாட்டு கமிட்டி தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் ஹாரி அர்பாத் சேக் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், "மசூதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த ஆண்டு நடைபெறும். விழாவில் அனைத்து நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மத தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். 5 அல்லது 6 ஆண்டுகளில் மசூதியை கட்டி முடிப்போம். இந்த மசூதி தாஜ்மகாலை விட அழகாக கட்டப்படும்" என்றார்.


Next Story