மராட்டியத்தில் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 6 பேர் கைது
மராட்டியத்தில் சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புனே,
மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த 15 வயது சிறுமியை அவருக்கு அறிமுகமான வாலிபர் ஒருவர் சம்பவத்தன்று கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றார். பின்னர் லாட்ஜில் வைத்து சிறுமியை கற்பழித்தார். இவரை தொடர்ந்து அவருடன் வந்த மேலும் 5 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இதனை காண்பித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என மிரட்டினர். மீறினால் இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக தெரிவித்தனர்.
மேலும் இதேபோல மிரட்டி கடந்த ஜூன் மாதம் முதல் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். நாளுக்கு, நாள் அவர்களின் தொல்லை அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். இதன்பேரில் சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சிறுமி தெரிவித்த அடையாளத்தின் படி பலாத்காரம் செய்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் அவுந்த் பகுதியை சேர்ந்த ஓம் ராஜு டிம்போல், ஜெய், அனில் ஜாதவ், சுனில் ஜாதவ், சுபம் மற்றும் கிரண் ஜாவ்லே ஆகியோர் என தெரியவந்தது.