கூட்டு பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி கர்ப்பம்; 3 பேர் கைது


கூட்டு பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி கர்ப்பம்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 2022-12-14T00:15:28+05:30)

ஹாசனில் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாசன்:


ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. இவள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று வந்த சிறுமி திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாள். இதனால் சிறுமியை அவளது பெற்றோர், ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிறுமியை டாக்டர் பரிசோதனை செய்தார். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர், சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக சிறுமியிடம் அவளது பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளாள். அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி, பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது அதேப்பகுதியை சேர்ந்த சுவாகத், சுதர்சன், பாப்பண்ணா ஆகியோர் அவளை வழிமறித்துள்ளனர்.

பின்னர், அவர்கள் சிறுமியை வாயை பொத்தி மறைவான பகுதிக்கு தூக்கி சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இதுபற்றி ெவளியே யாரிடமும் கூறினால் ெகாலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போய் யாரிடமும் இதுபற்றி கூறவில்லை என சிறுமி கூறியுள்ளாள்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சக்லேஷ்புரா போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுவாகத், சுதர்சன், பாப்பண்ணா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டு பலாத்கார சம்பவம் சிறுமி கர்ப்பமானதால் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story