7 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்

7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
7 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
Published on

லக்னோ,

உத்தரபிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டம் நாஹ்ரா கிராமத்தை 7 வயது சிறுமி கடந்த 5-ம் தேதி வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தார். 2-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமியை அதேபகுதியை சேர்ந்த 25 வயதான ரோகித் சவுகான் என்ற இளைஞர் தனது பைக்கில் கடத்தி சென்றுள்ளார்.

அந்த சிறுமியை தனது வீட்டிற்கு கடத்தி சென்ற ரோகித் சிமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தனது குழந்தைக்கு நடந்த கொடுரம் குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் தொடக்கத்தில் போலீசில் புகார் அளிக்காமல் தவிர்த்துள்ளனர்.

பின்னர், சிறுமியின் தந்தை கடந்த வெள்ளிக்கிழமை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரோகித்தை கைது செய்து போக்சோ வழக்கில் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com