புனித வெள்ளி பிரதமர் மோடி வாழ்த்து


புனித வெள்ளி  பிரதமர் மோடி வாழ்த்து
x

இன்று புனித வெள்ளியில், கர்த்தராகிய கிறிஸ்து ஆசீர்வதிக்கப்பட்ட தியாக உணர்வை நினைவு கூர்கிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஏசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது ஏசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்ததையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் நிகழ்வாகும்.

கிறிஸ்தவ வழிபாட்டில் முக்கியமான புனித வெள்ளி நாள் ஏசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) கொண்டாட்டத்துக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

ஏசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்த புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் கிறிஸ்துவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புனித வெள்ளியின் மையக் கருத்து என்னவென்றால் தீமையின் மீது நன்மை கொண்ட வெற்றியை நினைவூட்டுவதாகும்.

இந்தநிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில்,

இன்று புனித வெள்ளியில், கர்த்தராகிய கிறிஸ்து ஆசீர்வதிக்கப்பட்ட தியாக உணர்வை நினைவு கூர்கிறோம். அவர் வலியையும் துன்பத்தையும் தாங்கினார், ஆனால் சேவை மற்றும் இரக்கத்தின் இலட்சியங்களிலிருந்து ஒருபோதும் விலகவில்லை. கர்த்தராகிய கிறிஸ்துவின் எண்ணங்கள் மக்களை ஊக்கப்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.


Next Story