பெண்களின் பங்கு இன்றி அரசு, குடும்பம் நடத்துவது சாத்தியமில்லை: முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் பேச்சு


பெண்களின் பங்கு இன்றி அரசு, குடும்பம் நடத்துவது சாத்தியமில்லை:  முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் பேச்சு
x

பெண்களின் பங்கு இன்றி அரசு நடத்துவதோ, குடும்பம் நடத்துவதோ சாத்தியமில்லை இமாசல பிரதேச முதல்-மந்திரி இன்று பேசியுள்ளார்.



சிம்லா,



இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் சிம்லாவில் நடந்த பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில், ரக்சாபந்தன் திருவிழாவை முன்னிட்டு அவருக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கட்டி விட்டு, ஆரத்தி எடுத்தனர்.

ரக்சாபந்தன் தினம் ஆண்டுதோறும், சகோதரர் மற்றும் சகோதரியின் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாக கொண்டாட பெறுகிறது. ரக்சாபந்தன் தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பெறுகிறது.

இதனை முன்னிட்டு ராக்கி கயிறுகள் விற்பனையும் சூடு பிடித்து உள்ளது. இந்த நாளில், தனது சகோதரரின் மணிக்கட்டில் சகோதரி ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். சகோதரர் தன்னை பாதுகாப்பார் என்ற உறுதிமொழியையும் சகோதரி பெற்று கொள்வார். இதற்கு பதிலாக, ஓர் உறுதிமொழியுடன் சகோதரரும், தனது சகோதரிக்கு சில பரிசுகளை வழங்குவார்.

முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குருக்கு மாணவிகள் ராக்கி கயிறு கட்டி விட்ட பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, பெண்களின் பங்கு இன்றி அரசு நடத்துவது சாத்தியமில்லை. குடும்பம் நடத்துவதும் அவர்கள் இன்றி சாத்தியமில்லை என்று பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இமாசல பிரதேசத்தில் பல்வேறு மகளிர் அமைப்புகளை சேர்ந்த பெண்கள் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குருக்கு ராக்கி கயிறு கட்டி விட்டனர்.


Next Story