கர்நாடகத்தில் 13,800 அரசு பள்ளிகளை மூட அரசு திட்டம்


கர்நாடகத்தில் 13,800 அரசு பள்ளிகளை மூட அரசு திட்டம்
x

கர்நாடகத்தில் 13,800 அரசு பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் சுமார் 45 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவலுக்கு பிறகு சில அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூட கர்நாடக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்து 800 பள்ளிகளை மூட அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்கு சில மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அகில இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, "கர்நாடகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறி 13 ஆயிரத்து 800 பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றுக்கு பதிலாக ஒரு வருவாய் கிராமத்திற்கு ஒரு மாதிரி பள்ளியை தொடங்கி அதில் குழந்தைகளை சேர்க்க அரசு ஆலோசித்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமனம் செய்து தரமான கல்வியை வழங்குவது அரசின் கடமை" என்றனர்.


Next Story