இரும்பு மீதான ஏற்றுமதி வரி ரத்து: மத்திய அரசு நடவடிக்கை


இரும்பு மீதான ஏற்றுமதி வரி ரத்து: மத்திய அரசு நடவடிக்கை
x

கோப்புப்படம்

இரும்பு மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

உள்நாட்டில் உருக்கு விலை அதிகரிப்பை தொடர்ந்து இரும்பு ஏற்றுமதியில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த மே மாதம் மத்திய அரசு விதித்தது. இதில் முக்கியமாக இரும்பு ஏற்றுமதிக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.இந்த வரியை மத்திய அரசு தற்போது ரத்து செய்து உள்ளது.

அதன்படி மே மாதத்துக்கு முந்தைய நிலையை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இரும்பு ஏற்றுமதியில் 2022-ம் ஆண்டு மே 22-ந் தேதிக்கு முன்பு இருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மேலும் இரும்புத்தாதுக் கட்டிகள் மற்றும் இரும்புத்தாதுத் துகள்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட உருக்கு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப்பெற்றுள்ளது' என குறிப்பிடப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தொழில் துறையினர் வரவேற்று உள்ளனர்.

இதைப்போல ஆந்த்ராசைட் அல்லது பி.சி.ஐ. நிலக்கரி உள்ளிட்ட சில நிலக்கரி வகைகளுக்கான இறக்குமதி வரிச்சலுகைகளும் திரும்பப்பெறப்பட்டுள்ளன.


Next Story