ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விலையுள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்தல்?


ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விலையுள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்தல்?
x

நாடு முழுவதும் விரைவில் 5ஜி சேவையை கொண்டு சேர்க்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விலையுள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு செல்போன் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 1-ம் தேதி பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மாற்று ஏர்டெல் சார்பில் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் விரைவில் 5ஜி சேவையை கொண்டு சேர்க்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தொலைத்தொடர்பு துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து, ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விலையுள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என செல்போன் நிறுவனங்களிடம் கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு முற்றிலும் 5ஜி செல்போன் விற்பனைக்கு மாற வேண்டும் எனவும் மத்திய அரசு, செல்போன் நிறுவனங்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story