சுங்க கட்டணம் வசூலிக்க புதிய தொழில்நுட்பம் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதி


சுங்க கட்டணம் வசூலிக்க புதிய தொழில்நுட்பம் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும்  மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதி
x

மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

புதுடெல்லி,

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் எனவும், சுங்கக்கட்டணம் வசூலிக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.

மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் குறித்த துணைக்கேள்விகளுக்கு பதிலளித்தபோது, அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும். இதன் மூலம் சாலைகளில் நீண்டவரிசை இருக்காது. கட்டணம் வசூலிக்க ஆட்கள் இருக்கமாட்டார்கள். இது மக்களுக்கு தடையில்லா பயணத்தை வழங்கி பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும்.

அதேநேரம் இதன் மூலம் அரசும் வருமானம் பெறும். அந்தவகையில் மாற்று முறையில் சுங்க கட்டணம் வசூலிக்க 2 வழிகளை அரசு பரிசீலித்து வருகிறது.

இதில் ஒன்று செயற்கைகோள் முறையிலானது. அதாவது வாகனங்களில் பொருத்தப்படும் ஜி.பி.எஸ். கருவி மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக்கட்டணம் பெற்றுக்கொள்ளும் முறை.

இரண்டாவது முறை நம்பர் பிளேட் அடிப்படையிலானது. இதில் பழைய நம்பர் பிளேட்டுக்கு பதிலாக கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு கொண்ட நம்பர் பிளடே் பொருத்தப்படும். இதன் மூலம் மென்பொருளைப் பயன்படுத்தி கட்டணத்தை வசூலிக்க முடியும்.

நெடுஞ்சாலையில் நீங்கள் தொடங்கும் புள்ளியில் பதிவு செய்யப்படுவதுடன், நீங்கள் நெடுஞ்சாலையை விட்டு வெளியேறும்போது மீண்டும் பதிவு செய்யும் வசதி கொண்ட எளிதான தொழில்நுட்பம் ஆகும்.


Next Story