ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி 5 மணி நேரம் போராடி மீட்பு


ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி 5 மணி நேரம் போராடி மீட்பு
x

அவருக்குத் தேவையான ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 5 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார்.

சுரேந்திரநகர்,

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தின் கஜநப் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வருபவர் மனிஷா என்ற 12 வயது சிறுமி. நேற்று காலை 7.30 மணி அளவில் தோட்டத்திற்கு சென்ற இந்த சிறுமி எதிர்பாராதவிதமாக சுமார் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார். அவர் 60 அடி ஆழத்தில் சிக்கித் தவித்துள்ளார்.

இதுபற்றி அறிந்ததும் காவல்துறை, சுகாதாரத்துறையினர் ராணுவ வீரர்களின் உதவியுடன் மீட்பு பணியில் இறங்கினர். சிறுமியின் நிலை கேமரா உதவியுடன் கண்காணிக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது. அவருக்குத் தேவையான ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 5 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். அவர் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜூன் 2-ந்தேதி இந்த மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் 2 வயது சிறுவன் இதுபோல ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story