தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை: குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆம் ஆத்மியில் இணைந்தார்
பா.ஜ.க.வில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. கேசரிசிங் சோலங்கி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள மாதார் சட்டசபை தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேசரிசிங் சோலங்கி. இந்த தொகுதியில் இருமுறை போட்டியிட்டு வென்றவர் இவர்.
ஆனால் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் கேசரிசிங் சோலங்கி மீண்டும் மாதார் தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பளிக்கவில்லை. அவருக்குப் பதிலாக இத்தொகுதிக்கு கல்பேஷ் பார்மர் என்பவரை வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. கேசரிசிங் சோலங்கி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இதுதொடர்பான தகவலையும், புகைப்படத்தையும் ஆம் ஆத்மி குஜராத் மாநில தலைவர் கோபால் இட்டாலியா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
Related Tags :
Next Story