குஜராத்தில் பாகிஸ்தான் உளவாளி கைது


குஜராத்தில் பாகிஸ்தான் உளவாளி கைது
x

கோப்புப்படம்

குஜராத்தில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உளவாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

குஜராத்,

குஜராத் மாநிலம் புவனேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் தீபக் கிஷோர் பாய் சலுங்கே (வயது 33). இவர் அப்பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் தொடர்பு உள்ளதாக உளவுப்பிரிவினருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் இவரை குஜராத் மாநில போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், தீபக் கிஷோர் பாகிஸ்தானின் ஹமீது, காஷிப் ஆகியோருக்கு தகவல் பரிமாறியதும், இந்தியாவில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story