குஜராத் சட்டமன்ற தேர்தல்: சோனியா, ராகுல் பிரசாரம்- நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு


குஜராத் சட்டமன்ற தேர்தல்: சோனியா, ராகுல் பிரசாரம்- நட்சத்திர  பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
x

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

அகமதாபாத்,

பாஜக ஆட்சி நடைபெற்றும் வரும் குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 27 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, காங்கிரஸ் சார்பில் குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதோரா, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், சச்சின் பைலட் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.



Next Story