கவர்னர் பதவியை நீக்கவேண்டும் - மே.வங்காள மந்திரி


கவர்னர் பதவியை நீக்கவேண்டும் - மே.வங்காள மந்திரி
x

கவர்னர் பதவியை நீக்கவிட்டு அதிகாரத்தை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் ஓப்படைக்க வேண்டும் என்றார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மந்திரி சோவண்டிப் சட்டோபயா கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது, கவர்னர் பதவி தேவையில்லை. வெவ்வேறு அரசியல் சூழ்நிலை, வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யும் இந்தியா போன்ற நாட்டில் கவர்னர் பதவியை நீக்கவேண்டும்.

கவர்னர் பொறுப்பு அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது. வளர்ச்சிக்கு பதிலாக நிறைய பிரச்சினைகளுக்கும் கவர்னர் பொறுப்பு காரணமாகுகிறது. கவர்னருக்கான பொறுப்புகள் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு மாற்றப்படவேண்டும்' என்றார்.


Next Story