வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ. கன்னத்தில் பளார்...! "இப்போது ஏன் வந்தாய்?" பெண் கோபம்...!


வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ. கன்னத்தில் பளார்...! இப்போது ஏன் வந்தாய்? பெண் கோபம்...!
x
தினத்தந்தி 13 July 2023 5:26 AM GMT (Updated: 13 July 2023 6:11 AM GMT)

தன்னை கன்னத்தில் அறைந்த பெண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எம்எல்ஏ ஈஸ்வர் சிங் கூறியுள்ளார்.

சண்டிகார்

பஞ்சாப் மற்றும் அரியானாவில் சமீபத்தில் பெய்த கனமழைக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது 7 பேர் அரியானாவில் பலியாகி உள்ளனர். பஞ்சாபில் வெள்ள்ம பாதித்த பாட்டியாலா, ரூப்நகர், மோகா, லூதியானா, மொஹாலி, எஸ்பிஎஸ் நகர் மற்றும் பதேகர் சாஹிப் மாவட்டங்களில் இதுவரை 10,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அரியானாவிலும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன கக்கர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இடைவிடாத மழை பெய்து வருவதால், பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அரியானாவில் பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணியில் ஜனநாயக ஜனதா கட்சி அங்கம் வகிக்கிறது. சிங்கின் குலா தொகுதியில் உள்ள பாட்டியா கிராமத்தில் காகர் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ.ஈஸ்வர் சிங் நேற்று வெள்ள நிலைமையை ஆய்வு செய்ய அந்த கிராமத்துக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் வெள்ள பாதிப்பினால் பாதிக்கபட்டு இருந்ததால் கோபமடைந்த அந்தப் பெண்ணும் வேறு சிலரும் ஈஸ்வர் சிங்கிடம் போதிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த அந்தப் பெண், "இப்போது ஏன் வந்தாய்?" என கேட்டு எம்.எல்.ஏ.வை சட்டென்று முகத்தில் அறைந்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்தப் பெண்ணுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என ஈஸ்வர் சிங் கூறியுள்ளார்.

"அவர் செய்ததற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதை நான் விரும்பவில்லை" என்று கூறிய ஈஸ்வர் சிங், "அந்தப் பெண் நான் நினைத்திருந்தால், தடுப்பணை உடைந்திருக்காது என்று கூறினார்.

நடத்திருப்பது ஒரு இயற்கை பேரழிவு என்றும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்தது என்றும் நான் அவருக்கு தெளிவுபடுத்தினேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.




Next Story