பாம்பு கடித்து உயிரிழந்த அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற தம்பியும் பாம்பு கடித்ததில் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்


பாம்பு கடித்து உயிரிழந்த அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற தம்பியும் பாம்பு கடித்ததில் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 5 Aug 2022 9:49 AM IST (Updated: 5 Aug 2022 9:59 AM IST)
t-max-icont-min-icon

பாம்பு கடித்ததால் உயிரிழந்த அவரது சகோதரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த நபரையும் பாம்பு கடித்தது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நபர் தன்னுடைய சகோதரனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், பாம்பு கடித்ததால் உயிரிழந்த அவரது சகோதரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த நபரையும் பாம்பு கடித்தது. அதில் அந்த இடத்திலேயே அவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவிந்த் மிசாரா(22 வயது) என்ற நபர், தன்னுடைய சகோதரர் அரவிந்த்(38 வயது) இறுதிச்சடங்கில் பங்கேற்க பவானிபூர் கிராமத்திற்கு சென்றார். கோவிந்த் மிசாராவின் அண்ணன் அரவிந்த் மிஸ்ரா கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாம்பு கடித்ததில் பலியானார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது கோவிந்த் மிசாராவையும் பாம்பு கடித்ததில் அவர் சம்பவம் இடத்திலேயே பலியானார்.

மேலும் அவருடன் வீட்டில் தங்கி இருந்த அவருடைய உறவுக்காரர் சந்திரசேக என்பவரையும் பாம்பு கடித்து விட்டு சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து, மருத்துவ மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், உள்ளூர் எம்எல்ஏ கைலாஷ் சுக்லாவும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.


Next Story