பல்மட்டா மதுபான விடுதியில் நடத்தப்பட்ட மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்; யு.டி.காதர் எம்.எல்.ஏ. பேட்டி


பல்மட்டா மதுபான விடுதியில் நடத்தப்பட்ட மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்; யு.டி.காதர் எம்.எல்.ஏ. பேட்டி
x

பல்மட்டா மதுபான விடுதியில் நடத்தப்பட்ட மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு யு.டி.காதர் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பல்மட்டா சாலையில் தி லவுஞ்ச் பப் என்ற பெயரில் ஒரு தனியார் மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த மதுபான விடுதிக்கு வந்த கல்லூரி மாணவர்கள் மதுபானம் அருந்திவிட்டு ஆபாசமாக நடனமாடினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பஜ்ரங்தள தொண்டர்கள் மதுபான விடுதிக்கு சென்று அங்கிருந்த மாணவ-மாணவிகளை அடித்து விரட்டினர். இதுகுறித்து மங்களூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக யு.டி.காதர் எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மங்களூரு அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த யு.டி.காதர் கூறியதாவது:- இரவு நேர மதுபான விடுதியால் மங்களூரு மாவட்டத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் மங்களூருவின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனை மாநில அரசு ஊக்குவிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story