தனியார் வாகனத்தில் வாக்கு எந்திரங்கள் - நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்


தனியார் வாகனத்தில் வாக்கு எந்திரங்கள் -  நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
x

வாக்கு எந்திரங்களை தனியார் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

சிம்லா,

68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேசத்தில் நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே, வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறன. ஆனால், சில வாக்குச்சாவடி மையங்களில் இருந்து பெறப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியார் வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகின. குறிப்பாக, ராம்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியார் வாகனத்தில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. தனியார் வாகனங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அல்லது தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், ராம்பூரில் எந்த வித அனுமதியும் இன்றி வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.


Next Story