இமாச்சல பிரதேச தேர்தல்: முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் வெற்றி
இமாச்சல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் சிராஜ் தொகுதியில் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சிம்லா,
இமாச்சலபிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இமாச்சலபிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 35 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அங்கு தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 30 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 4 இடங்களில் சுயேட்சைகள் முன்னிலையில் உள்ளனர்.
இமாச்சல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர், மாண்டி மாவட்டத்தில் உள்ள சிராஜ் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் தொடங்கியதில் இருந்து ஜெய்ராம் தாக்கூர் முன்னிலை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிராஜ் தொகுதியில் 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் சிராஜ் தொகுதியில் இருந்து தொடர்ந்து 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story