பசு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி வாயு தொடங்கிய இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம்


பசு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் உயிரி வாயு தொடங்கிய இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம்
x
தினத்தந்தி 24 Aug 2022 1:00 AM IST (Updated: 24 Aug 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பசு சாணத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் உயிரி வாயு ஆலை திட்டப் பணியை இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனம் தொடங்கியுள்ளது.

ராஜஸ்தான்:

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தியை பயன்படுத்தும் நோக்கத்துடன், இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனம், ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோரில், மாட்டு சாணத்தைக் கொண்டு உயிரி வாயு தயாரிக்கும் திட்டத்திற்கான பணியை தொடங்கியுள்ளது.

கழிவிலிருந்து மின்சாரம் என்னும் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் ஹெச்பிசிஎல்-ன் முதல் திட்டம் இதுவாகும். உயிரி எரிவாயு தயாரிக்க இந்த நிலையத்தில் தினசரி 100 டன் மாட்டு சாணம் பயன்படுத்தப்படும். இதிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம். இத்திட்டம் ஓராண்டு காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும்.

இந்தத் திட்டத்திற்கான பூமி பூஜை, ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் பத்மேடா கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உயிரி கழிவுகள், கால்நடைகளின் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும், கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின்படி, மத்திய அரசு தொடங்கியுள்ள கோபர்தன் திட்டத்தின்கீழ், இந்தத் திட்டம் உருவாக்கப்படுகிறது.


Next Story