வீட்டில் புகுந்து ரூ.6½ லட்சம் நகை-பணம் திருட்டு

தார்வாரில் வீட்டில் புகுந்து ரூ.6½ லட்சம் நகை-பணம் திருட்டு மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
வீட்டில் புகுந்து ரூ.6½ லட்சம் நகை-பணம் திருட்டு
Published on

உப்பள்ளி:-

தார்வார் டவுனை சேர்ந்தவர் மல்லாப்பூர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடி சென்றுவிட்டனர். இந்த நிலையில் மல்லாப்பூர் தனது வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.6.50 லட்சம் மதிப்பிலான நகை-பணம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து மல்லாப்பூர், தார்வார் உபநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து தார்வார் உபநகர் போலீசார் வழக்குப்பதிவு

செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com