தங்கும் விடுதியில் விபசாரம்: 7 பெண்கள் மீட்பு
தங்கும் விடுதியில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 7 பெண்கள் மீட்கப்பட்டனர்.
பெங்களூரு: காட்டன் பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது. அதன் பேரில் அந்த தங்கும் விடுதியில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து தங்கும் விடுதி மேலாளர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்திருந்தனர். மேலும் விபச்சாரத் தொழிலில் தள்ளப்பட்டு இருந்த 7 பெண்களும் மீட்கப்பட்டு இருந்தார்கள். தங்கும் விடுதியில் நாலாவது மாடியில் சமையல் அறை பகுதியில் ஒரு ரகசிய அறை அமைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story