போதைப்பொருள் மாஃபியா கும்பலுக்கு குஜராத் அரசு ஆதரவு: ராகுல் காந்தி விமர்சனம்


போதைப்பொருள் மாஃபியா கும்பலுக்கு குஜராத் அரசு ஆதரவு: ராகுல் காந்தி விமர்சனம்
x

போதைப்பொருள் மாஃபியா கும்பலுக்கு குஜராத் அரசு ஆதரவு அளிப்பதாக ராகுல் காந்தி சாடியுள்ளார்.

புதுடெல்லி,

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது; குஜராத் முத்ரா துறைமுகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3000 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அதேபோல், கடந்த மே 22-ஆம் தேதி ரூ.500 கோடி மதிப்பில் 56 கிலோவும், ஜூலை 22- ஆம் தேதி ரூ.375 கோடி மதிப்பில் 75 கிலோவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இரட்டை என்ஜின் அரசாங்கத்தில் அமர்ந்து இருக்கும் யார் இந்த போதை மற்றும் கள்ளசாராய கும்பலுக்கு ஆதரவாக இருக்கின்றனர்? ஏன் குஜராத் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக்கப் படுகிறார்கள்?

எனது கேள்விகள் என்னவென்றால், மூன்று முறை பிடிபட்ட பிறகும் மீண்டும் எப்படி போதை பொருட்கள் அதே துறைமுகத்திற்கு தொடர்ந்து வருகின்றன? குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையா? அல்லது மாபியா கும்பலுக்கு பயம் இல்லையா? அல்லது அரசே மாபியா அரசா?' என கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.


Next Story