இஸ்ரோ சார்பில் மனித விண்வெளி பயண கண்காட்சி
பெங்களூரு ஜவகர்லால் நேரு கோளரங்கத்தில் நாளை முதல் 3 நாட்கள் இஸ்ரோ சார்பில் மனித விண்வெளி பயண கண்காட்சி நடக்கிறது.
பெங்களூரு: பெங்களூரு ஜவகர்லால் நேரு கோளரங்கத்தில் நாளை முதல் 3 நாட்கள் இஸ்ரோ சார்பில் மனித விண்வெளி பயண கண்காட்சி நடக்கிறது.
மனித விண்வெளி கண்காட்சி
75-வது சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு ஜவகர்லால் நேரு கோளரங்கத்தில் இஸ்ரோ சார்பில் 22-ந் தேதி (அதாவது நாளை) முதல் 24-ந் தேதி வரை 3 நாட்கள் மனித விண்வெளி கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனித விண்வெளி கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி இன்று நேரு கோளரங்கத்தில் நடந்தது.
இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்து கொண்டு மனித விண்வெளி கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் கண்காட்சியில் இடம் பெற்று இருந்த ககன்யான் மாதிரி, ஏவுகணை வாகனங்கள், செயற்கை கோள்கள், விண்வெளி உடைகள், நுண்புவிஈர்ப்பு கருவி உள்ளிட்டவகளை அவர் இஸ்ரோ சார்பில் மனித விண்வெளி பயண கண்காட்சிபார்வையிட்டார்.
பார்வையாளர்களுக்கு அனுமதி
கண்காட்சியின் தொடக்க விழாவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியில் இடம்பெற்று இருந்த ககன்யான் மாதிரி உள்ளிட்டவைகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கண்காட்சியின் முதல் நாளான நாளை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
நாளை மறுநாள். அதற்கு அடுத்த நாள் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.