காங்கிரசை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்- குலாம் நபி ஆசாத்


காங்கிரசை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்- குலாம் நபி ஆசாத்
x

காங்கிரசை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என குலாம் நபி ஆசாத் கூறினார்.

புதுடெல்லி

காங்கிரசின் மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இது தொடா்பாக கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு அவா் எழுதிய கடிதத்தில், கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-

காங்கிரசில் இருந்து வெளியேற மோடியை ஒரு காரணமாகக் கூறுவது சாக்குபோக்கு. காங்கிரஸ் தலைமை குறித்து ஜி23 கடிதம் எழுதப்பட்டதில் இருந்தே காங்கிரசாருக்கு என்னிடம் பிரச்சனை உள்ளது. அவர்களுக்கு யாரும் கடிதம் எழுதுவதையோ கேள்விகளை எழுப்புவதையோ அவர்கள் எப்போதும் விரும்பவில்லை. இதுவரை பல காங்கிரஸ் கூட்டங்கள் நடந்தன. ஆனால், ஒரு முடிவு கூட எடுக்கப்படவில்லை. காங்கிரசிலிருந்து வெளியேற என்னை அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில என் நண்பர்களே என்னைப் பற்றி குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள். காங்கிரசில் விரோதிகள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி மீது எனக்கு இருந்த மரியாதை, ராகுல் காந்தி மீதான மரியாதை இந்திரா காந்தியின் குடும்பத்தினருக்கும், ராஜீவ்-சோனியா காந்தியின் மகனுக்கும் உரியது. தனிப்பட்ட முறையில், அவரது நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவரை வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம். அவருக்கு ஆர்வம் இல்லை.

பா. ஜனதாவில் இணையப் போவதில்லை. இன்னும் 10 நாள்களில் புதிய கட்சி தொடங்கப் போகிறேன்.

பிரதமர் மோடியை கசப்பான மனிதர் என்று நினைத்தேன் ஆனால் அவர் மனித நேயத்தை காட்டினார் என கூறினார்.


Next Story