காங். என்ன செய்தது என்று மோடி, அமித்ஷா கேட்கின்றனர்... காங். செயல்படவில்லையென்றால்.... - மல்லிகார்ஜூன கார்கே அதிரடி பேச்சு
கடந்த 70 ஆண்டுகள் காங்கிரஸ் என்ன செய்தது என்று மோடி, அமித்ஷா கேள்வி கேட்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
காந்திநகர்,
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், குஜராத்தின் டிடியபடா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார்.
பொதுக்கூட்டத்தில் கார்கே பேசுகையில், கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது? என்று மோடி, அமித்ஷா கேட்கின்றனர். காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகள் செயல்படவில்லையென்றால் நாம் இன்று ஜனநாயகத்தை பார்க்கமுடியாது' என்றார்.
Related Tags :
Next Story