பொதுஇடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை


பொதுஇடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை
x

பொதுஇடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிக்கமகளூரு கலெக்டர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிக்கமகளூரு;

கலெக்டர் ரமேஷ் பேட்டி

சிக்கமகளூரு டவுனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தியேட்டரில் படம் பார்க்க சென்ற பரத்(வயது 25) என்பவருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே டிக்கெட் எடுப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த கும்பல், பரத்தை ஓட, ஓட விரட்டி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த பரத், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிக்கமகளூரு டவுன் போலீசார், 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

சிக்கமகளூரு டவுனில் ஒரு தியேட்டர் அருகே வாலிபரை, 8 பேர் கொண்ட கும்பல் விரட்டி பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதனால் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுகிறது.

எனவே, சிக்கமகளூரு மாவட்டத்தில் பொதுஇடங்களில் யாரேனும் அனுமதி இன்றி துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்துகொண்டு சுற்றித்திரிந்தால் அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை போலீசார் தீவிரமாக கண்காணிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story