"ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள் பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளனர்" - ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு


ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள் பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளனர் - ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
x

ஐ.ஐ.டி.யின் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் நமது அறிவாற்றலை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர் என்று திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி ஐ.ஐ.டி.யின் வைர விழா கொண்டாட்ட நிறைவு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது;-

"கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் திறனை ஐ.ஐ.டி.க்கள் உலகிற்கு நிருபித்துள்ளன. ஐ.ஐ.டி.யின் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் நமது அறிவாற்றலை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.

இன்று உலக அரங்கில் இந்தியாவின் மேம்பட்ட நிலைப்பாட்டில் ஐ.ஐ.டி.க்கள் பெரும் பங்காற்றியுள்ளன. ஐ.ஐ.டி. டெல்லியிலும் மற்ற ஐ.ஐ.டி.க்களிலும் படித்தவர்களில் சிலர் இப்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டிஜிட்டல் புரட்சியில் முன்னணியில் உள்ளனர். அறிவியல் மற்றும் பொறியியலை தாண்டி ஐ.ஐ.டி.க்களின் தாக்கம் உள்ளது.

கல்வி, தொழில், தொழில்முனைவு, சமூகம், செயல்பாடு, இதழியல், இலக்கியம் மற்றும் அரசியல் என பல்வேறு துறைகளில் ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள் முன்னணியில் உள்ளனர். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நாட்டிற்கு பெருமை. எதிர்காலத்திற்கு ஏற்றவாறு நமது கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story