பெங்களூருவில் குடியிருப்புகளில் வசிப்போர் பராமரிப்பு கட்டணம் செலுத்தாவிட்டால் வழக்கு


பெங்களூருவில்  குடியிருப்புகளில் வசிப்போர் பராமரிப்பு கட்டணம் செலுத்தாவிட்டால் வழக்கு
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் குடியிருப்புகளில் வசிப்போர் பராமரிப்பு கட்டணம் செலுத்தாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மக்கள் குடியிருப்புகளில் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் அந்த குடியிருப்புகளில் வசிப்பதற்கு பராமரிப்பு கட்டணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அந்த தொகையில் தான் குடியிருப்புகளில் ஏற்படும் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனால் பெங்களூருவில் உள்ள சில குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் தங்களின் பராமரிப்பு தொகையை செலுத்த மறுப்பதாக குடியிருப்போர் சங்கம் சார்பில் கூறப்படுகிறது.

இதனால் சில குடியிருப்புகளில் அதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களின் குடிநீர், மின்சார சேவையை குடியிருப்பு சங்கங்கள் துண்டித்து விடுகின்றன. இதற்கு குடியிருப்பு வாசிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் சங்கத்தின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், குடியிருப்புக்கான பராமரிப்பு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு முறையாக நோட்டீசு அனுப்ப வேண்டும். அப்போதும் அவர்கள் அதை செலுத்தவில்லை என்றால் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும்' என்றார்.


Next Story