சுதந்திர தினத்தன்று சிக்கமகளூரு மாவட்டத்தில், அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்கவிடவேண்டும்


சுதந்திர தினத்தன்று சிக்கமகளூரு மாவட்டத்தில், அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்கவிடவேண்டும்
x

சுதந்திர தினத்தன்று சிக்கமகளூரு மாவட்டத்தில், அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்கவிடவேண்டும் என கலெக்டர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமேஷ் தலைமையில், ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அடுத்த மாதம்(ஆகஸ்டு) 15-ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று, சிக்கமகளூரு மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி பறக்கவிட வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சிக்கமகளூரு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கும் சுதந்திரதின விழா நிகழ்ச்சியை மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ் தேசிய கொடியேற்றி தொடங்கி வைக்கிறார். இதைதொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதை, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு தொற்று குறைந்துள்ளதால் சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் சிக்கமகளூரு மாவட்ட துணை கலெக்டர் ரூபா, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story