காஷ்மீரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து எல்லை பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு..!


காஷ்மீரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து எல்லை பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு..!
x

காஷ்மீரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து எல்லை பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்தார்.

ஜம்மு,

காஷ்மீரில் கதுவா மாவட்டம் ஹீராநகர் செக்டாரில் சர்வதேச எல்லை அருகே புறக்காவல் நிலையம் உள்ளது. அதில் பணியாற்றி வந்த எல்லை பாதுகாப்பு படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுக்நந்தன் பிரசாத் என்பவர், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் காயமடைந்து கிடந்தார்.

அதை பார்த்த சக வீரர்கள், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சுக்நந்தன் பிரசாத்துக்கு வயது 55. பணிக்காக வழங்கப்பட்ட அவரது துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுதான் அவரது உயிரை பறித்துள்ளது.

எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்ததா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story